Mudakathan Gravy: மூட்டுவலிக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? முடக்கத்தான் குழம்பு வைத்து சாப்பிடுங்க
மூட்டுவலியினால் அவதிப்படுபவர்களுக்கு நிரந்தர தீர்வு அளிக்கும் முடக்கத்தான் குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் 40 வயதை கடந்துவிட்டாலே மூட்டு வலியினால் அவதிப்படுகின்றனர். இதற்கு பல மருத்துவர்களை சென்று சந்தித்து வருவதுடன், அதிக செலவுகள் செய்து மருந்து மாத்திரிகளையும் வாங்கி சாப்பிடுகின்றனர்.
ஆனால் மூட்டு வலி, வாத நோய் பிரச்சனையை தீர்ப்பதில் முடக்கறுத்தான் கீரை உதவுகின்றது. தோல் நோய்களுக்கு இதன் இலைகளை அரைத்து பூசி குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் தோன்றும் சமயம் முடக்கறுத்தான் கீரை சாப்பிடலாம். முடக்கத்தான் கீரையில் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
image: indianvegkitchen
தேவையான பொருட்கள்
முடக்கறுத்தான் இலை- 100 கிராம்
வெங்காயம் -2 (பொடிதாக அரிந்து கொள்ளவும்)
தக்காளி- 2
புளி- சிறிய எலுமிச்சம்பழம் அளவு
சாம்பார் பொடி- 2 ஸ்பூன்
மஞ்சள்தூள்- அரை ஸ்பூன்
தனியாதூள்- 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் -2 ஸ்பூன்
வெந்தயம்- கால் ஸ்பூன்
உப்பு- சுவைக்கேற்ப
செய்முறை
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, முடக்கறுத்தான் இலையை வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் ஆற வைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் தாளித்து, தக்காளி, வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
image: tastyhealthydays
பின்னர் புளியை கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, தனியா பொடிகளை கலந்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அத்துடன் அரைத்து வைத்துள்ள முடக்கறுத்தான் கலவையை போட்டு உப்பு கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த குழம்பை சூடான சாதத்துடனும், இட்லி, தோசை, பொங்கல் போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிடலாம்.
மூட்டு வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வயிற்றுவலி, மலச்சிக்கல் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக அமையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |