பஞ்சாப் அணியில் இருந்து விலகியதற்கான காரணம் என்ன? முதன் முறையாக மனம் திறந்த கே.எல்.ராகுல்!
ஐபிஎல் 15வது சீசன் வரும் மார்ச் 26-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த முறை கூடுதலாக 2 அணிகள் சேர்ந்துள்ளதால் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலும், குஜராத் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன் பஞ்சாப் அணிக்காக கேப்டனாக ராகுல் செயல்பட்டு வந்தார்.
பின்னர் பஞ்சாப் அணியில் விடுவிடுக்கப்பட்டதால், கே.எல்.ராகுலை லக்னோ அணி வாங்கியது. மேலும் அவருக்கு கேப்டன் பதவியையும் கொடுத்துள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் அணியில் இருந்து விலகியதற்கான காரணத்தை குறித்து, தற்போது கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.
புது விதமான அனுபவம் வேண்டும்
அதில், 4 ஆண்டுகளாக பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளேன். அந்த அணியுடன் நீண்ட காலம் பயணித்துள்ளேன். இதனால், அணி மாறுதல் தொடர்பான முடிவினை எடுப்பதற்கு எனக்கு கஷ்டமாக அமைந்தது.

ஆனாலும் புதிய அணியில் இணைந்து புது விதமான பயணத்தினை தொடர விரும்பினேன். அதனால் லக்னோ அணியில் இணைந்துள்ளேன் என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
அவர் விருப்பம்
இதுகுறித்து பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அணில் கும்பளே தெரிவிக்கையில், “கே.எல்.ராகுலை தக்க வைக்க வேண்டும் என்றுதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவரை கேப்டனாக நியமித்தோம்.
ஆனால் அவர் ஏலத்தில் செல்ல விரும்பியதை நாங்கள் மதிக்கிறோம். இது ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட உரிமை” என தெரிவித்து இருக்கிறார்.