சீரியலில் ரொமான்ஸ் காட்சியில் கலக்கும் நடிகர் விஜய்யின் தந்தை... எந்த சீரியல்னு தெரியுமா?
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சீரியல் ஒன்றில் நடிப்பில் அசத்தி வருகின்றார்.
கிழக்கு வாசல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் கிழக்கு வாசல். இந்த சீரியலில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் வீட்டில் பெரியவராக நடித்து வருகின்றார்.
சினிமா இயக்குனரான இவர் தனது யதார்த்தமான நடிப்பினால் அசத்திவருவதுடன், தற்போது ரொமான்ஸிலும் அசத்தி வந்துள்ளார்.
குறித்த சீரியல் ஒரு கூட்டுகுடும்ப வாழ்க்கையில், தத்தெடுத்த மகளுக்காக அப்பாவின் போராட்டம், அவரை நல்ல நிலைக்கு கொண்டு வர வயதான காலத்தில் கூட கடினமான வேலைக்கு செல்லுவது போன்ற கதை களமாகும்.
தற்போது குறித்த சீரியலின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த சீரியலில் எஸ்.ஏ.சந்திரசேகர் வயதான காலத்தில் கூட தனது மனைவிக்கு ஆசையாக பூ வாங்கி கொண்டுவந்து தலையில் வைத்து அழகு பார்க்கின்றார்.
மேலும் இந்த சீனில் இவரது ரொமான்ஸைப் பார்த்த ரசிகர்கள், இவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.