சமையலறை உபகரணங்களுக்கும் காலாவதி தேதி உண்டா?
சமையலறையில் நாம் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் காலாவதி தேதி உண்டு என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக எந்தவொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கெட்டுப்போகவோ, உடைந்து போகவோ செய்துவிடும். பெரும்பாலும் நாம் சாப்பிடும் பொருளுக்கு காலாவதி தேதி போட்டிருப்பார்கள்.
ஆனால் நமது சமையலறை பொருட்களுக்கும் காலாவதி தேதி இருக்கின்றது என்பது நம்மில் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
காலாவதி தேதி என்றால் என்ன?
காலாவதி தேதி என்பது ஒரு உற்பத்தியாளர் ஒரு பொருளின் முழுமையான ஆற்றல் மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் கடைசி தேதியைக் குறிக்கிறது.
இந்த தேதிக்கு பின்பு பொருட்களை பயன்படுத்தினால், அது தரத்தில் குறைவானதாகவும், தீங்கு விளைவிக்கக்கூடியதாகவும் மாறிவிடும்.
சேமிப்பு வழிமுறைகளில் அதிகமான கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று ஒருமுறை திறக்கப்பட்டதும், அச்சிடப்பட்ட தேதியைப் பொருட்படுத்தக் கூடாது.
ஏனெனில் பெரும்பாலான பொருட்கள் திறக்கப்பட்டுவிட்டால், அதன் ஆயுள்காலம் குறைந்துவிடுமாம். இந்த தகவல் பெரும்பாலும் பேக்கேஜிங்கில் உள்ள சிறிய எழுத்துக்களில் காணப்படும்" என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காலாவதியாகும் சமையலறை பொருட்கள்
நான் ஸ்டிக் சமையல் பாத்திரம் இரண்டு முதல் 5 வருடங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டுமாம். அதன் மேல் பூச்சி உறிய ஆரம்பித்துவிட்டால் அதற்கு முன்பே மாற்றிவிட வேண்டும்.
மரக்கரண்டியினை ஒன்று அல்லது 2 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றவும். ஆனால் அது விரிசல் அடைந்தால் அதற்கு முன்பே மாற்றிவிடவும்.
மர வெட்டுப்பலகையை 2 அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறையும், பிளாஸ்டிக் வெட்டுப்பலகையை 1 அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். நிறமாற்றம் ஏற்பட்டால் உடனே மாற்றவும்.
சிலிகான் ஸ்பேட்டுலா (Silicone Spatula) இவற்றினை 2 -4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றவும். ஓரங்களில் உருகினால் அல்லது மிகவும் மென்மையாக மாறினால் உடனே மாற்றவும்.
இதே போன்று கட்லரி என்று அழைக்கப்படும் வெட்டும் பொருட்களை சில ஆண்டுக்கு ஒருமுறை மாற்றவும்.
சமையலறையில் துடைப்பதற்கு பயன்படுத்தும் பஞ்சு மற்றும் துடைப்பானை 2-4 வாரங்களுக்கு ஒருமுறை மாற்றவும்.
பீலர் என்று அழைக்கப்படும் தோல் சீவும் கருவியினை ஒவ்வொரு 1-2 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றவும். பிளேடு மழுங்கினால் மாற்றிக் கொள்ளலாம்.
செஃப் கத்தியினை 5-10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இதே போன்று துருவும் கருவியினை ஒவ்வொரு 3-5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
பிளாஸ்டிக் சேமிப்பு கொள்கலன்களை ஒவ்வொரு 1-3 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொள்ளவும்.
குறிப்பாக உணவு சேமிப்பிற்காக, PET, HDPE அல்லது PP குறியீடுகளைக் கொண்ட கொள்கலன்களைத் தேர்வு செய்யவும். PVC அல்லது PS குறியீடுகளைக் கொண்ட கொள்கலன்களைத் தவிர்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |