எஞ்சிய சப்பாத்தி மா ஒரு வாரம் கெடாமல் இருக்கணுமா?
நாம் எல்லோரும் பொதுவாக இரவு நேரத்தில் வீட்டில் சப்பாத்தி செய்வது வழக்கம். ஆனால் இந்த சப்பாத்தி மாவு எமது அளவை விட சில நேரங்களில் மீதமாகி விடுகின்றன.
இதற்காக தான் இந்த பதிவில் மீதமுள்ள சப்பாத்தி மாவை வீசாமல் அதை ஒரு வாரத்திற்கு வைத்திருக்கும் முறையை எப்படி கையாள்வது என்பதை இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
சப்பாத்தி மா
நீங்கள் மாவை பிசைந்து அதை உங்கள் அளவிற்கு எடுத்துவிட்டு பின்னர் மீதமுள்ள மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதை பிளாஸ்டிக் பேப்பரில் இறுக்கமாக மூடி வைத்து அதன் மேல் ஒரு பாரமான பாத்திரத்தை வைத்து விட வேண்டும்.
இதை நீங்கள் ஃபிரிட்ஜிலும் வைக்கலாம். நீங்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பின்பு பயன்படுத்தபோகிறீர்கள் என்றால் நீங்கள் அந்த மாவை தனிதனி உருண்டைகளாக எடுங்கள்.
பின்னர் அது ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி அல்லது அலுமினியப்பேப்பரில் சுற்றி உறைய வைக்கலாம்.
இதை நீங்கள் ஃபிரீசரில் வைத்தால் மிகவும் நல்லது. இப்படி செய்வதால் காற்று உள்ளே போகாமல் மாவு பிரஷாக இருக்கும். மாவின் மேற்பரப்பில் லேசாக ஆலிவ் எண்ணெய் அல்லது தாவர எண்ணெய் தடவவும்.
இது காற்று தொடர்பைக் குறைக்கும் ஒரு தடையை உருவாக்க உதவுகிறது மற்றும் மாவின் வெளிப்பகுதி உலராமல் தடுக்கிறது. மற்றும் எண்ணையால் ஒரு புதிய சுவை இந்த மாவில் சேரும்.
சப்பாத்தி மீதம் இருந்தால் கட்டாயமாக இந்த டிப்ஸை செய்து பாருங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |