அழுக்கு படிந்த கேஸ் பர்னரை பளிச்சுனு புதுசு மாதிரி மாத்தனுமா? ஒரு நிமிடத்தில் சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்
கேஸ் ஸ்டவை சுத்தம் செய்வது மிகப்பெரிய வேலை.
சமைக்கும்போது சிதறும் எண்ணெய், பொங்கி வழிவது, போன்றவை கொட்டி, கொட்டி அந்த பர்னரே நாசமாகிவிடும்.
இந்த பர்னரை சுத்தம் செய்வது மிகப்பெரிய காரியம் தான். ஆனால் அந்த கேஸ் பர்னரை எப்படி ஒரு நிமிடத்தில் சுத்தம் செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து நன்கு கறை படிந்த பர்னரை தேய்க்க வேண்டும். அப்படி தேய்த்து பின் வெந்நீரில் போட்டு ஊற விட்டு கழுவினால் பர்னர் பளிச்சென்று மாறிவிடும்.
வினிகர்
ஒயிட் வினிகரில் அரை மணி நேரம் வரை ஊறவைத்து பின் அதை நன்கு ஸ்கிரப்பர் கொண்டு தேய்த்து எடுத்தால் பர்னரில் இருக்கும் கறைகள் முழுக்க நீங்கி புதுசு போல இருக்கும்.
டிஸ்வாஷ் வித் சால்ட்
நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் டிஸ்வாஷ் லிக்விடுடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு பர்னரை தேய்த்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தாலும் பர்னர் சுத்தமாகிவடும்.