சின்னத்திரை மிரட்டிய வில்லியோட மகனா இவர்? தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?
முதலும் நீ முடிவும் நீ படத்தில் நடித்துள்ள கிஷேன் தாஸின் அம்மா யாரென்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
முதலும் நீ முடிவும் நீ
தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹீட் கொடுத்த திரைப்படம் தான் முதலும் நீ முடிவும் நீ.
இந்த திரைப்படத்தில் இளம் நடிகரான கிஷேன் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தற்கால இளைஞர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்று தந்தது.
மேலும் திரைப்படத்தில் நாயகனாக வந்த கிஷேன் விளம்பரங்களில் நடித்து வருகிறார். அத்துடன் யூடியூப் சேனல் மூலம் வீடியோக்களை பகிர்ந்தும் வருகிறார்.
கிஷேனுக்கு இந்த திரைபடத்தை தொடர்ந்து சினிமா பட வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றதாம்.
கிஷேனின் அம்மா யார் தெரியுமா?
இந்த நிலையில் சின்னத்திரை பிரபலம் பிருந்தா தாஸ், கிஷேன் தாசின் அம்மா என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “ஆனந்தம்” என்ற தொடரின் சைலண்ட் வில்லியாக நடித்திருந்தார்.
இவர் தற்போது கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
தன்னுடைய அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கிஷேன் அம்மாவின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் “இவர் தான் உங்களுடைய அம்மாவா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |