அம்மாவின் பிறந்த நாளில் அமலாபால் செய்த வேலையை பாருங்க.. வைரல் வீடியோ..!
நடிகை அமலாபால் தனது அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு செய்த செயலின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அமலாபால்
அமலாபால் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர்.
இந்த படத்தினை தொடர்ந்து மைனா, தெய்வ திருமகள், வேட்டை உள்ளிட்ட பல திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியினை தந்தது.
விஜய் நடிப்பில் வெளிவந்த தலைவா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்.
திருமண வாழ்க்கை
சினிமாவில் தொடர்ந்து பல வெற்றிகளை சந்தித்து வந்த அமலாபால் திடீரென இயக்குனர் ஏ.எல் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இப்படிப்பட்ட நிலையில் குறைவான காலங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.
விவாகரத்திற்கு பிறகு கிளாமரில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருவதாக பேசப்படுகிறது.
அம்மாவின் பிறந்தநாள்
இந்த நிலையில் நடிகை அமலா பால் தனது தாயார் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நினைவாக மரம் ஒன்றை நட்டுள்ளார்.
இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து தனது அம்மாவின் பிறந்தநாளில் அவரது அருகில் இருக்க முடியாவிட்டாலும் அவரது நினைவாக இந்த மரத்தை நடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது அம்மாவை தான் மிகவும் நேசிப்பதாகவும் அவருக்கு தனது இனிமையான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் அதில் தெரிவித்துள்ளார்
வீடியோ
இது குறித்த வீடியோவை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
தற்போது அந்த பதிவு வைரலாகி வருவதோடு அவரது அம்மாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.