சொத்து மதிப்பில் ரத்தன் டாடாவையே ஓவர்டேக் செய்யும் உதவியாளர்! இளவயதிலேயே கோடிகளில் புரளும் அதிஷ்டம்
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனு நாயுடுவின் சொத்து மதிப்பு தொடர்பிலான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
யார் இந்த ரத்தன் டாடா?
இந்தியா என எடுத்து கொள்ளும் போது ரத்தன் டாடாவை பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது.
அந்தளவு பிரபல்யமான தொழிலதிபராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரத்தன் டாடாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் மிகவும் சிறப்பாகவும் விமர்ச்சையாகவும் இடம்பெற்றது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த புகைப்படங்களில் பார்ப்பதற்கு ரத்தன் டாடாவின் மகன் போல் நெருக்கமாக இளைஞர் ஒருவர் இருந்துள்ளார்.
அவர் யார் என தேடி பார்க்கும் போதும் தான் ஒரு உண்மை வெளிவந்துள்ளது. அந்த இளைஞர் தான் ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனு நாயுடு.
நெருக்கமாக இருக்கும் இளைஞர் மகனா? அந்த இளைஞர் ரத்தன் டாடாவின் நம்பிக்கை பெற்றவராம், அவர் மகன் போல் நெருக்கமாக இருப்பதால் அவர் மகன் இல்லை.
மாறாக இந்த சிறுவயதில் ஒரு உதவியாளரா என்று நெட்டிசன்கள் இவர் குறித்து தகவல் புரட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த வகையில் “சாந்தனு நாயுடு” சிறு வயதிலேயே கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? இது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
சாந்தனு நாயுடுவின் புகைப்படங்களை பார்க்கும் போது யார் இவர்? எப்படி டாடாவின் குடும்பத்தினுள் வந்தார்? என பல கேள்விகள் எழும் இதனை பார்க்கலாம்.
29 வயதில் சாந்தனுவின் சொத்து மதிப்பு
கடந்த மே மாதத்திலிருந்து டாடாவின் அலுவலகத்தில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு தற்போது 29 வயது ஆகின்றது.
இதனை தொடர்ந்து சாந்தனு பல நிறுவனங்களில் பணிபுரிந்து தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். “குட்ஃபெல்லோஸ்” என்ற நிறுவனத்தின் மூலம் வயதானவர்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுத்து வருகிறார்.
இவர் நடத்தும் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் 5 கோடியாகும். இவ்வாறு சாந்தனு ஒரு நாள் சாலையோரம் உள்ள நாய்களுக்கு தன்னுடைய அறக்கட்டளையிலிருந்து உணவு வழங்கி கொண்டிருக்கிறார்.
அந்த சாலையில் சென்ற டாடாவிற்கு இந்த இளைஞரின் செயல் பிடித்துள்ளது.
இதன்படி, சாந்தனுவிற்கு மேலாளர் பதவியை கொடுத்துடன், அவரின் அறக்கட்டளையில் முதலீடும் செய்துள்ளார்.
அந்தவகையில், இந்தியாவில் மிகபெரிய தொழிலதிபராக தொண்டு செய்து வரும் டாடா. “டாடா குழுமத்தை சர்வதேச கார்ப்பரேட் ” நிறுவனத்தில் முக்கிய பங்காளர் ஆவார். இது போல் சமூகத்திற்கு தேவையான உதவிகளை டாடா செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |