உடல் எடையை குறைக்கும் கிராம்பு டீ .. தினமும் காலையில் குடிக்கலாமா?
பொதுவாக டீ என பார்க்கும் போது பல வகையான டீக்கள் இருக்கின்றன.
பலபேர் விரும்பி சாப்பிடக்கூடிய டீயில் கிராம்பு போட்டு குடித்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
இது சமையலில் நறுமண பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. கிராம்பை சாப்பாட்டுடன் சேர்த்து கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கிருமிகள் உடலிலிருந்து நீங்குகின்றன.
இத்தகைய பல நன்மைகளை கிராம்பு டீ கொடுக்கின்றது.
அந்த வகையில் கிராம்பு டீ குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பது தொடர்பில் தெளிவாக தெரிந்து கொள்வோம்.
கிராம்பு டீ
1. கிராம்பில் டீயில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்றுக்கள் பரவாமல் தடுக்கின்றது.
2. வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே சத்துக்கள் கிராம்பில் அதிகம் இருக்கின்றது. அத்துடன் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது சளி, இருமல் போன்றவற்றில் இருந்து எம்மை பாதுகாக்கின்றது.
3. உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் கிராம்பு டீ குடிக்கலாம். இது எடையை சீக்கிரமாக குறைக்க உதவியாக இருக்கும்.
4. பொதுவாக டீ செரிமான பிரச்சினைக்கு மருந்தாக தொழிற்படும். ஆனால் அதில் கொஞ்சமாக கிராம்பு போட்டு குடிப்பதால் நோய் சுத்தமாக குணமாகும்.
5. பற்களுக்கு பயன்படுத்தும் அநேகமான பற்பசைகளில் முக்கிய பொருளாக கிராம்பு பயன்படுத்துகிறார்கள். இது ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து பல் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. அத்துடன் வாயில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை விரட்டியடிக்கின்றது. இதனால் வாய்த்துர்நாற்றம் பிரச்சினை வராமல் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |