20 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய இந்திய அரசர்.. கதையை கேட்டால் வாயடைத்து போவீங்க
தற்போது உள்ளவர்களை விட அக்காலத்தில் வாழ்ந்த சில ராஜாக்கள் சர்வாதிகாரத்துடன் மக்களை ஆட்சி செய்தார்கள்.
அதிலும் குறிப்பாக அரசர்களுக்கு யாரை பிடித்தாலும் திருமணம் செய்து கொள்ளலாம். அதற்காக தான் அக்காலப்பகுதியில் அந்தபுரம் அமைக்கப்பட்டது.
இன்றைய காலக்கட்டத்தில் ஒருவர் ஒன்றுக்கு மேற்ப்பட்ட திருமணங்கள் செய்தால் அது சட்டப்படி குற்றமாகும். ஆனால் அக்காலத்தில் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.
அப்படி இல்லாவிட்டால் உறவில் கூட இருக்கலாம். இதனை மனைவிமார்களும் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். அரசர்கள் தனிப்பட்ட விருப்பம், காதல், வாரிசை பெற்றுக் கொள்ளல், அரச காரணங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக பல பெண்களை திருமணம் செய்தார்கள்.
அந்த வகையில், 20க்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த அரசர்களின் கதைகளை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.

1. மகாராஜா பூபிந்தர் சிங் (1891-1938)
கி.பி 1891-1938 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பட்டியாலா சமஸ்தானத்தை ஆட்சி செய்தவர் தான் மகாராஜா பூபிந்தர் சிங். இவர் அரசராக இருந்த காலப்பகுதியில் 10 பெண்களை திருமணம் செய்து மனைவிகளாகவும், 350 பெண்களை அந்தபுரத்திலும் வைத்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு இதன் மூலம் 88 குழந்தைகள் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதில் 52 குழந்தைகள் உயிருடன் இருந்துள்ளன. இவ்வளவு மனைவிகள் இருந்தாலும் அரசருக்கு ராணி மகாராணி ஸ்ரீ பக்தவர் கவுர் சாஹிபாவை மிகவும் பிடிக்குமாம். இவரின் ஆட்சிக்காலத்தில் உணவுமுறை, ஆடம்பர வாழ்க்கை முறை மற்றும் கிரிக்கெட் ஆகிய விடயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார்.

2. மகாராஜா இரண்டாம் சவாய் ராம் சிங் (1833-1880)
ஜெய்ப்பூர் சமஸ்தானத்தை கடந்த 1833-1880 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மகாராஜா இரண்டாம் சவாய் ராம் சிங் ஆட்சி செய்து வந்துள்ளார்.இவர் முதல் முறையாக ஜோத்பூர் மகாராஜாவின் மகளை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்பினால், ஆனால் சில பல காரணங்களால் அந்த முடிவு தடைப்பட்டு, ஜோத்பூரின் மகாராஜா தக்த் சிங்கின் மூத்த மகள் ரத்தோர்ஜி சந்த் கன்வர்ஜியை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர், மகாராஜா தக்த் சிங்கின் இரண்டு மகள்கள் மற்றும் ரேவாவின் மகாராஜா விஸ்வநாத் சிங்கின் மகள் ஜனக் கன்வர் உட்பட 10 திருமணங்களை அடுத்தடுத்து செய்து கொண்டார்.

3. மகாராஜா ஜகத்ஜித் சிங்(1872-1949)
கபுர்தலாவின் மகாராஜா ஜகத்ஜித் சிங் 6 தடவைகள் திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்து கொண்ட பெண்களில் மகாராணி பிரேம் கவுர் என்று பெயர் மாற்றப்பட்ட அனிதா டெல்கடோ என்ற ஸ்பானிஷ் ஃபிளெமெங்கோ நடனக் கலைஞர் ஒருவரும் இருந்துள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |