யாழ்பாணத்தில் அவரு எப்படி இருந்தார் தெரியுமா? நடிகர் கிங் கொங் உருக்கம்
ரோபோ சங்கரின் இறுதிச்சடங்கிற்கு திரை பிரபலங்கள் அவரின் நண்பர்கள் அவரை பற்றி பேசிய விடயங்கள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
ரோபோ சங்கர் இறுதி சடங்கு
ரோபோ சங்கர் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 19 அன்று காலமானார்.
இதனை தொடர்ந்து நேற்று மாலை அவரது உடல் இறுதி சடங்குகளுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இவரது உடலுக்கு பல பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.
இந்த நிலையில் அவருடன் நெருக்கமான பிரபலங்கள் அவரை பற்றி கூறிய விடயம் உண்மையில் பெருமைகுரிய விடயங்களாக பார்க்கப்படுகின்றது.
அவர் இந்த சினிமாவிற்கு வர முன்னணி காரணமாக இருந்தவர் நடிகர் கிங் கொங் தான். ரோபோ சங்கரை கிங்கொங்கிற்கு 2000 ம் ஆண்டிலிருந்தே தெரியுமாம்.
அவர் தான் இவருக்கு அதிகமான ஷோக்களுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்து யாருடைய துணையும் இல்லாமல் தனி ஆளாக சம்பாதித்து தற்போது உலகத்திற்கு தெரியும் அளவில் மிகவும் பிரபலமான ஒருவராக இருக்கிறார் ரோபோ சங்கர். என கிங் கொங் பல விடயங்களை கூறி இருந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |