என்றும் இளமையாக இருக்கனுமா? ராஜாக்களின் உணவான இதை கண்டிப்பாக சாப்பிடுங்க
ராஜாக்களின் உணவாக கருதப்படும் கருப்பு கவுனி அரிசியில் செய்யப்படும் கஞ்சி குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கருப்பு கவுனி அரிசி - ஒரு கப்
சீரகம் - ஒரு ஸ்பூன்
பூண்டு - 5 பல்
தேங்காய் பால் - 1 கப்
தண்ணீர், உப்பு - தேவையான அளவு

செய்முறை
முதலில் கருப்பு கவுனி அரிசியை கழுவி ஒரு இரவு ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த அரிசியை போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு குக்கரில் அரைத்து வைத்துள்ள அரிசியினை போட்டுவிட்டு, கஞ்சிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
பின்பு பூண்டு பல், மற்றும் சீரகம் சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைத்து 4 விசில் விட்டு இறக்கவும்.

தொடர்ந்து தேங்காயை மிக்ஸியில் அரைத்து ஒரு கப் பால் எடுத்துக் கொள்ளவும். குக்கரை திறந்து நன்றாக கிளறிவிட்ட பின்பு அதனுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் சேர்த்து கலந்துவிடவும்.
அவ்வளவு தான் என்றும் இளமையாக வைக்கும் ராஜாக்களின் உணவான கருப்பு கவுனி அரிசி கஞ்சி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |