Bigg Boss: வைல்டு கார்ட் திவ்யா கணேஷ் சட்டதரணியா? இது தெரியாம போச்சே
பிக் பாஸ் வீட்டில் தற்போது வைல்டு கார்டு என்றியாக வந்திருக்கும் திவ்யா கணேஷ் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் திவ்யா கணேஷ்
வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் 9 வீட்டிற்கு வந்திருக்கும் திவ்யா கணேஷை பார்வையாளர்களுக்கு பிடித்துவிட்டது.
பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவுடன் ஒப்பிடும்போது திவ்யா ரொம்ப தெளிவாக இருப்பதாக தற்போது பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பார்வதி அந்த பிக் பாஸ் வீட்டில் யார் பேசுவதையும் கேட்காமல் மிகவும் நடந்துகொண்டு இருக்கிறார்.
கடந்த சீசனில் எப்படி மாயாவிற்கு ஒரு அர்ச்சனாவோ அதே போல பார்வதிக்கு ஒரு திவ்யா அந்த வகையில் திவ்யா கணேஷ் மிகவும் போல்டாக இருந்து வருகிறார். இவரை பற்றிய தகவலும் தற்போது வைரலாகி வருகின்றது.

திவ்யா கணேஷ்
பிக் பாஸ் சீசன் 9ல் வைல்டு கார்டு போட்டியாளராக களம் இறங்கி இருக்கும் திவ்யா கணேஷ், இவரை சீரியல் நடிகையாக மட்டுமா தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் இவர் சட்டம் படித்தவர். சென்னையில் சட்டப்படிப்பை முடித்தவர்.
ராமநாதபுரம் கமுதியை சேர்ந்த திவ்யா கணேஷ், சட்டம் படிக்க சென்னை வந்தார். இவர் படித்து கொண்டிருக்கும் போதே ஆங்கரிங் என தன் திறமையை காட்டினார்.
பின்பு சன் டிவி கேளடி கண்மணி சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையானார். பின்பு விஜய் டிவி, ஜீ தமிழ் என எல்லா சேனலில் நடிக்க தொடங்கினார்.

பிக் பாஸ் வருவதற்கு முன்பு சன் டிவியில் அன்னம் சீரியலில் வில்லியாக நடித்து வந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர்கே சுரேஷ் - திவ்யா கணேஷ் தங்களது திருமணம் குறித்து அறிவித்தனர்.
ஆனால் என்ன காரணம் என தெரியவில்லை திவ்யா கணேஷ் தன் திருமணத்தை நிறுத்தி இருந்தார். இதை பல பேட்டிகளிலும் வெளிபடையாக கூறியிருந்தார்.
அதுமட்டுமில்லை ஐதராபாத் விமான நிலையத்தில் தன்னிடம் அத்துமீறிய நபரை, ஏர்போர்ர்டில் வைத்து அடித்தும் இருக்கிறார்.

இப்படி எந்த பிரச்சனை வந்தாலும் அதை தனியாக நின்று சமாளிக்க கூடியவர். சென்னையில் தனியாக படித்து வளர்ந்தாலும் தன்னம்மிக்கை தைரியம் அதிகம் கொண்ட பெண்ணாக இருக்கிறார்.
இதனால் ரசிகர்கள் திவ்யாவுக்கு பிக் பாஸ் வீட்டை சமாளிப்பது எல்லாம் ஈஸி என்கின்றனர். வந்த முதல் நாளில் இருந்து விஜே பார்வதி, வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் என அனைவருக்கும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |