viral video: ராஜ நாகத்தின் விஷத்தை பார்த்ததுண்டா? இந்த நபரின் மிரள வைக்கும் செயலை பாருங்க!
நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த ராஜ நாகத்தை அசால்ட்டாக பிடித்து அதன் விஷத்தைக் கக்க வைத்த மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைராலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகளின் அரசனாக அறியப்படும் ராஜ நாகத்தின் பெயரை கேட்டாலே பலரும் தலைதெறிக்க ஓடுவார்கள்.
குறிப்பாக அதிக விஷம் கொண்ட பாம்புகளின் பட்டியில் ராஜ நாகம் முக்கிய இடம் வகிக்கின்றது. இது ஒரு தடவையில் வெளியேற்றும் விஷத்தை கொண்டு சுமார் 15 தொடக்கம் 20 மனிதர்களை கொல்ல முடியும் என ஆய்வுத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.
உண்மையில் ராஜ நாகங்கள் மனிதர்களிடம் இருந்து விலகி இருப்பதையே விரும்புகின்றன. ஆனால், ஆய்வுகளின் போது அல்லது மீட்பு முயற்சியில் அதைக் கையாளும் போது அரிதான சூழ்நிலைகளில் மட்டுமே ராஜ நாகங்கள் மனிதர்களை தாக்க முற்படும்.
இந்நிலையில் நபரொருவர் கொடிய விஷம் கொண்ட ராஜ நாகத்தையே அசால்ட்டாக பிடித்து அதன் விஷத்தை வெளியேற்றும் மிரள வைக்கும் காணொளியொன்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |