அடேங்கப்பா.. மலைப்பாம்பு போல் மிரட்டிய ராஜ நாகம்- பார்த்தும் கதறிய இலங்கையர்
இலங்கையில் சிங்கள மக்கள் வாழும் பகுதியில் மலைப்பாம்பு போன்ற வந்து மிரட்டிய நாகப்பாம்பின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் என்றாலே பயம் இல்லாதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். இந்தியர்கள் பெரும்பாலும் பாம்புகளை கடவுளாக பார்க்கிறார்கள். ஆனாலும் பாம்புக்கடியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
பருவக்கால மாற்றங்கள் ஏற்படும் பொழுது தன்னுடைய உணவு மற்றும் உறைவிடத்திற்காக பாம்புகள் மனிதர்கள் வாழும் பகுதியில் நடமாடுகின்றன.
அப்போது அதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மனிதர்கள் நடந்து கொண்டால் அவர்களை தாக்கி, உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சினை நகரப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிகமாக பார்க்கலாம்.

அடேங்கப்பா இவ்வளவு பெரிய பாம்பா?
அந்த வகையில் இலங்கையில், சிங்களவர்கள் அதிகமாக வாழும் பகுதியில் மாலைப்பாம்பு போன்று நீளமாகவும், பார்ப்பதற்கு ஆக்ரோஷமாக இருக்கும் நாகப்பாம்பு காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
காணொளியை பார்க்கும் பொழுதே சற்று பயமாக உள்ளது. ஒரு மனிதரையே விழுங்கும் அளவுக்கு குறித்த நாகப்பாம்பு உள்ளது.
காணொளியை எடுக்கும் நபர், “இந்தியா போன்ற நாடுகளில் இவ்வளவு பெரிய நாகப்பாம்பு இருக்கிறது. ஆனால் இலங்கையில் இவ்வளவு பெரிய நாகப்பாம்பு இருக்கும் என நான் நம்பவில்லை. அடேங்கப்பா எவ்வளவு பெரியதாக இருக்கிறது. பார்ப்பதற்கே பீதி கிளம்புகிறது..” என பேசுகிறார்.
இந்த காணொளி இணையவாசிகள் கவனத்திற்கு சென்றுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |