ராஜ பரம்பரை ராஜ பரம்பரை தான்யா...தங்க ஆடையில் மன்னர்
ராஜ பரம்பரை ராஜ பரம்பரை தான்யா...என்று கூறுமளவுக்கு சில விடயங்கள் நடக்கத்தான் செய்கின்றது. அந்த வகையில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் வருகின்ற 6ஆம் திகதி மன்னர் சார்லஸ்ஸூக்கு முடி சூட்டு விழா நடைபெற இருக்கிறது.
அதில் மன்னர் சார்லஸ் இரண்டு வரலாற்று சிறப்பான ஆடைகளை அணியவிருக்கிறார்.
image - BBC
இந்த இரண்டு ஆடைகளில் ஒன்று 1821ஆம் ஆண்டு அப்போதைய மன்னர் 4ஆம் ஜோர்ஜூக்காகவும் இன்னொன்று 1911ஆம் ஆண்டு மன்னர் ஜார்ஜூக்காகவும் வடிவமைக்கப்பட்டதாக தெரிய வருகிறது.
இந்த உடைகளை எலிசபெத் ராணி அவரது முடிசூட்டு விழாவின்போது அணிந்திருந்துள்ளார். அதற்கு பின்னர் மன்னர் சார்லஸ்ஸின் முடிசூட்டு விழாவிலேயே பயன்படுத்த தயாராகி வருகின்றது.
இது முழுக்க முழுக்க தங்கத்தினால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளாக இருப்பதுதான் இதில் ஹைலட்.
image - MSN