கையில் குழந்தையுடன் ராணி எலிசபெத்! கர்ப்ப கால புகைப்படத்தை பார்க்கவே முடியாதாம்... ஏன் தெரியுமா?
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், ராணி குழந்தையை கையில் வைத்திருக்கும் புகைப்படமும், கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஏன் வெளியாக வாய்ப்பில்லை என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
பிரிட்டன் ராணி
பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டாம் எலிசபெத். அப்போது அவருக்கு வயது 25.
பிரிட்டன் வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்த பெருமை இரண்டாம் எலிசபெத்திற்கு உள்ள நிலையில், இவருடைய ஆட்சிக்காலத்தில் 15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.
நெடுநாள் ராணியாக பதிவி வகித்த அவர் கடந்த 9 ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். இந்நிலையில், இன்று அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
V&A Images/Alamy
ராணியின் இறுதி ஊர்வலம்
இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ராணியின் உடல் ஒருவாரம் வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை ராணியின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் அபேவிற்கு ராஜ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டது.
இங்கே உலக தலைவர்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டுசெல்லப்படும் உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்படுகிறது.
BettmannGetty Images
பொதுவாக புகழடைந்த நபர்களின் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை உலகம் உன்னிப்பாக கவனித்துவருவது இயல்புதான். ஆனால் அரச குடும்பத்தில் இவ்வாறு இல்லையாம். உங்களால் இரண்டாம் எலிசபெத்தின் கர்ப்பகால புகைப்படங்களை எங்கேயுமே பார்க்க முடியாது.
அரச கட்டுப்பாடு
இரண்டாம் எலிசபெத் 1948 ஆம் ஆண்டு முதல்முறை கர்ப்பமானார். அப்போதைய அரச வழக்கப்படி, ராணியின் கர்ப்பம் குறித்து வெளியே தகவல்கள் வெளியிடப்படுவதில்லை.
குழந்தை பிறக்கும்வரையில் மக்களுக்கு ராணி கர்ப்பமாக இருக்கும் தகவல் கூட தெரிவிக்கப்படாது. இரண்டாம் எலிசபெத் ராணிக்கு கிங் சார்லஸ் III, இளவரசர் ஆண்ட்ரூ (யோர்க் டியூக்), அன்னே (இளவரசி ராயல்), மற்றும் இளவரசர் எட்வர்ட் (வெசெக்ஸ் ஏர்ல்) என நான்கு வாரிசுகள் இருக்கின்றனர்.
ஆனால் அவர் கர்ப்பமாக இருக்கும்போது ஒருமுறை கூட புகைப்படம் எடுக்கப்படவில்லை என்பது வரலாற்று வினோதம்தான்.
Image credit: Instagram/theroyalfamily