viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி!
கொடிய விஷம் கொண்ட கிங் பிரவுன் பாம்பு நபரொருவர் காலில் அணிந்துள்ள சப்பாத்தை கடிக்கும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கிங் பிரவுன் என அழைக்கப்படும் ராஜ பழுப்பு பாம்பு ஆஸ்திரேலியாவில் மிகவும் விஷமுள்ள பாம்புகளில் ஒன்றாகும்.
அதன் விஷம் வீரியம் மிக்க நச்சுக்களை உள்ளக்கியது. இதன் விஷம் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருந்தாலும், உள்நாட்டு தைபன் அல்லது கிழக்கு பழுப்பு பாம்பு போன்ற பிற ஆஸ்திரேலிய பாம்புகளை விட இது குறைவான ஆபத்தானதாகவே அறியப்படுகின்றது.
ராஜா பழுப்பு பாம்பின் விஷத்தில் மயோடாக்சின்கள், உறைதல் பொருட்கள் மற்றும் நியூரோடாக்சின்கள் உள்ளிட்ட நச்சுக்களின் சிக்கலான கலவை உள்ளது.
இந்த கூறுகள் மனிதர்களுக்கு வலி, வீக்கம், இரத்த உறைவு கோளாறுகள், தசை சேதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பல்வேறு அறிகுறிகளுடன் மரணத்தையும் ஏற்படுத்த வல்லது.
இந்நிலையில் தற்போது இந்த கொடிய பாம்பிடம் கடிவாங்கும் ஒரு நபரின் காட்சியடங்கிய மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |