29 நாய்களை பரிதாபமாக சுட்டு கொன்ற கொடியவர்கள் - நடந்தது என்ன? கண்கலங்க வைக்கும் தகவல்
தெருவில் சுற்றி திரியும் 29 நாய்களை இரண்டு பேர் இரக்கம் இல்லாமல் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வளைகுடா நாடான கத்தாரில், தங்களது மகன்களை நாய்கள் கடித்ததாக சிலர் நாய்கள் இருந்த தொழிற்சாலைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த சிலர் 29 நாய்களை சுட்டுக் கொன்றனர்.
சில நாய்கள் காயமடைந்தன என தெரிவித்துள்ளனர். இது குறித்து மிருகநல அமைப்புகள் மற்றும் ஆர்வளர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்த கொடூர சம்பவம் அங்கிருந்த பாதுகாப்பு பணியாளர்கள் கண் முன்னே நிகழ்ந்திருக்கிறது. கும்பலாக வந்த ஆண்களில் இருவர் கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் விலங்குகள் மிட்பு அமைப்பு ஒன்று தெரிவிக்கிறது.
இதனால், சுடப்பட்ட நாய்களில் ஒரு குட்டி மட்டும் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது.
சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கடுமையான தண்டனைகளை கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் சமுக வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.