காலையில் இந்த பிரச்சனை இருக்கின்றதா? அலட்சியப்படுத்த வேண்டாம்
காலையில் சில அறிகுறிகள் காணப்பட்டால் அது சிறுநீரக கல் பிரச்சனையாக கூட இருக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிறுநீரக கற்கள்
இன்றைய காலத்தில் சிறுநீரக கற்கள் பிரச்சனையால், பலரும் அவதிப்பட்டுள்ள நிலையில், காலையில் காணப்படும் சில அறிகுறிகளை நாம் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிறுநீரகத்தில் தாதுக்கள் மற்றும் உப்பு குவிந்து கடினமான துகள்களின் வடிவத்தை எடுக்கும் பொழுது சிறுநீக கல் பிரச்சனை உருவாகின்றது.
சிறுநீரக கற்கள் காணப்பட்டால் காலையில் காணப்படும் அறிகுறிகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
காலையில் தோன்றும் அறிகுறிகள் என்ன?
சிறுநீரக கல் பிரச்சனை ஏற்பட்டால், உடம்பில் நச்சுக்கள் அதிகமாகிவிடுவதால், போதுமான தூக்கம் கிடைக்காமல் உடல் சோர்வாக இருக்கும்.
காலையில் அல்லது குளித்த பின்பு தோலில் அரிப்பு ஏற்பட்டால் சிறுநீரக கல் பிரச்சனை காணப்படலாம்.
சிறுநீரக கல் பிரச்சனை காணப்பட்டால் நுரையீரலில் திரவத்தன்மை அதிகரித்து சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.
காலையில் உயர் ரத்த அழுத்தம், வாந்தி, குமட்டல் பிரச்சனைகள் காணப்பட்டாலும் சிறுநீரக கற்களின் அறிகுறியாக இருக்கலாம்.
காலையில் பாதங்களில் வீக்கம் போன்ற பிரச்சனை காணப்பட்டால் அதுவும் சிறுநீரக பிரச்சனையாக இருக்கலாம்.
காலையில் சிறுநீரில் சிவப்பு அல்லது லேசான ரத்தப்புள்ளிகள் காணப்பட்டால் சிறுநீரக கல் பிரச்சனை இருக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |