சிறுநீரக கற்களால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க
இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் உணவுப்பழக்கம் மாறியுள்ள நிலையில், நீரிழிவு நோய் மட்டுமின்றி சிறுநீரக கற்ககளால் மக்கள் அதிகமாக அவதிப்படுகின்றனர்.
சிறுநீரக கல் பிரச்சினைக்கு தீர்வளிக்கும் உணவு
சிறுநீரக கற்களால் அவதிப்படும் நபர்கள், சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுநீரக கற்களால் அவதிப்படும் நபர்கள், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் பழங்களை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக புடலங்காய், சுரைக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றினை சாப்பிடுவதுடன், குறிப்பாக வாழைத்தண்டு சாறு குடித்தால், நிரந்தர தீர்வினை பெறலாம்.
வாழைத்தண்டு சாறு போன்ற திரவ உணவுகளை எடுத்துக்கொண்டால், சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி நோயிலிருந்து விடுபட முடியும்.
மசாலா உணவுகளை தவிர்த்து, இளநீர் மற்றும் நீர் இவற்றினை அதிகமாக உண்ண வேண்டும். மேலும் காபி தேநீர், குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் இவற்றினை அளவோடு உட்கொள்ள வேண்டும்.