சிறுநீரக கல் பிரச்சினையா? உடனடியாக கரைக்கும் பூ
சிறுநீரக கற்கள் என்பது கல்சியம் மற்றும் உப்பு போன்ற தாதுக்களால் ஆன சிறிய படிவுகள் ஆகும். இந்த தாதுக்கள் மற்றும் உப்புகள் காலப்போக்கில் சிறுநீரகத்தின் சுவர்களில் உருவாகி நாளடைவில் அவை சிறுநீரகக் கற்களாக மாற்றமடையும்.
அறிகுறிகள்
சிறுநீரக கற்கள் ஏற்பட்டிருகும் ஒருவருக்கு இவ்வாறான அறிகுறிகள் காணப்படும்.
- சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரியும் உணர்வு
- சிறுநீரகத்தில் இரத்தம் கசிதல்
- துர்நாற்றம்
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- சிறிய சிறிய அளவு
- சிறுநீர் கழித்தல் காய்ச்சல், குளிர் மற்றும் குமட்டல்
- சிவப்பு நிறமுடைய சிறுநீர்
- அதிக வியர்வை
- வயிறு மற்றும் இடுப்புக்கு பரவும் வலி
இவ்வாறான அறிகுறிகளைக் கண்டால் அதற்கேற்ற சிகிச்சை முறைகளைப் பெறுவது நல்லது.
இவ்வாறு ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ள நாள் ஒன்றுக்கு அதிகளவு நீர் அருந்துதல், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், உண்ணும் உணவில் அதிகளவு உப்பு சேர்ப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் இவற்றுக்கு மருத்துவமும் உள்ளது. அவற்றையும் தெரிந்துக் கொள்வோம்.
சிறுகண்பீளை பால்
சிறுகண்பீளை செடியானது தண்டில் பூக்கும் பூக்கள் தான் இந்த சிறுநீரக கற்களை அகற்றும். அறுவை சிகிச்சை இல்லாமல் சிறுநீரக கற்களை அழிக்க சிறந்த மருந்தாகும்.
தேவையான பொருட்கள்
- சிறுகண்பீளை செடி (வேரோடு)
- நாட்டு சக்கரை
- பால்
சிறுகண்பீளை பூ மற்றும் வேர்களை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன் கொஞ்சமாக நாட்டுச்சக்கரையும் சேர்த்துக்கொள்ளவும். சிறிது நன்றாக அரைத்துக் கொண்ட பின்பு, அதனுடன் பால் சேர்த்துக் அரைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த சிறுகண்பீளை பாலை ஒருநாளை இரண்டு வேளை எடுத்துக்கொள்ளலாம்.
50-100 மில்லி லீற்றர் வரை எடுத்துக்கொள்ளலாம்.
10- 15 நாட்கள் வரை குடித்தாலே போதும் சிறுநீரகக்கற்கள் கரைந்து விடும்.
மேலும், இந்த பாலை மாதவிடாய் கோளாறு உள்ளவர்களும்
கர்ப்பிணி பெண்களும் பாலில் கலந்தோ அல்லது கசாயமாகவோ குடிக்கலாம்.