நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது இந்த அறிகுறிகள் இருக்கா? கவனமாக இருங்க
நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நமது உடலில் இருக்கும் உள் உறுப்புகள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். அதில் ஏதாவது கோளாறு இருப்பின் அது நமக்கு அறிகுறிகளை காட்டி தரும்.
நமது உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு தான் சிறுநீரகம். இது நம் உடலில் கழிவுகளை வெளியேற்றுதல், திரவங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உடலை ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமாக வைத்திருத்தல் போன்ற முக்கிய தொழிலில் ஈடுபட்டுள்ளது.
இப்படி இருக்கையில் இந்த உறுப்பில் ஏதாவது பிரச்சனை அல்லது அது செயல் இழக்க தொடங்கினால் அது விரைவான அறிகுறிகளை காட்டும். இப்படி அறிகுறிகள் தெரிந்தவுடன் அதை நீங்கள் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி சரி செய்து கொள்ளுங்கள்.
சிறுநீரக செயல் இழப்பு
சிறுநீரக செயல் இழப்பு (சிறுநீரக செயலிழப்பு) என்பது சிறுநீரகங்கள் உடலின் கழிவுகளை வடிகட்டவும், திரவ சமநிலையை பராமரிக்கவும் முடியாத நிலையை அடைதலாகும்.
இது நாள்பட்ட சிறுநீரக நோயின் இறுதி கட்டமாகும் (ESRD), மேலும் இதற்கு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் தேவைப்படலாம். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் பிற சிறுநீரக நோய்கள் இதன் பொதுவான காரணிகளாகவும் இருக்கலாம்.
அறிகுறிகள்
நுரை அல்லது குமிழியான சிறுநீர் - நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது ருரை அல்லது குமிழ்கள் போல தோன்றினால் இது சிறுநீரக செயல் இழப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
இதற்கு காரணம் புரத இழப்பாக இருக்கலாம். சிறுநீர் ஆரோக்கியமாக இருந்தால் புரதம் உடலில் இருந்து வெளியேறுவதை தடுக்கும்.
சிறுநீரகம் நன்றாக இல்லா விட்டால் தான் புரதம் சிறுநீரகம் வழியாக வெளியேறும். முக்கியமாக அல்புமின் சிறுநீரில் வெளியேறுவது அதிகப்படியான நுரைக்கு காரணமாக இருக்கலாம்.
காலின் கீழ்புறம் மற்றும் முகத்தில் வீக்கம் - உடலில் திரவம் தேங்கினால் கால் கைகளில் வீக்கம் ஏற்படும். இதற்கு காரணம் சிறுநீரகங்களால் அதிகப்படியான நீர் மற்றும் உப்பை வடிகட்ட முடியாவிட்டால், அது திசுக்களில் படிந்து, உடலின் பல்வேறு பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக கீழ் கால்கள், கணுக்கால் மற்றும் பாதங்களில் தான் இது அதிகமாக இருக்கும்.
இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் - உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றினால் இதுவும் சிறுநீரக செயல் செயல் இழப்பின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று.
இவை செயலிழக்கும் போது திரவங்களைச் சரியாக வடிகட்டும் திறனை இழக்கின்றன, மேலும் ஒருவர் சாதாரண அளவு தண்ணீரை அருந்தினாலும் அவர் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கத்திற்கு உட்படுவார்.
சிறுநீர் அடர்ந்த நிறத்தில் இருப்பது - சிறுநீரில் ஏற்படும் நிற மாற்றங்கள் உடலில் சில பிரச்சினைகள் இருப்பதற்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.
அடர் மஞ்சள், பழுப்பு அல்லது தேநீர் நிற அல்லது இரத்தத்துடன் சிறுநீர் வெளியேறினால் அது சிறுநீர் செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
சிறுநீரில் இரத்தம் சிறுநீரக கற்கள், தொற்று அல்லது மிகவும் கடுமையான அடிப்படை திசு சேதத்தின் அறிகுறியாக இருக்கலாம். உடலில் இருந்து திறம்பட வெளியேற்றப்படாத கழிவுகள் சிறுநீரின் நிறத்தைப் பாதிக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |