Jack Fruit Benefits: புற்றுநோயை தடுக்கும் பலாப்பழம்.. யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தின் சுவையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
இதில் புரதச்சத்துக்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ், விட்டமின்கள் ஏ, சி மற்றும் பி இருக்கின்றன.
இதிலுள்ள விட்டமின் ஏ சத்து உடலுக்கும், மூளைக்கும் வலு சேர்க்கிறது. ரத்தத்தை விருத்தியாக்குவதுடன் நரம்புகளுக்கும் உறுதி தருகிறது.
பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு நல்லது, இதய நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.
விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, பலாப்பழத்தை உட்கொண்டு வந்தால் தொற்றுகளில் இருந்து விடுபடலாம், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்.
பலாப்பழத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்குகிறது, இதிலுள்ள புரதம் குடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.
ப்ரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் நிறைந்திருப்பதால் உடலுக்கு நீண்ட நேரம் சக்தியை வழங்குகிறது.
குறிப்பாக கோடை காலத்தில் பலாப்பழம் சாப்பிடுவது உடலை குளிர்ச்சியாக்கும், புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.
பலாக்கொட்டையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் நம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி புற்றுநோய் வராமல் காக்கும், கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாக்குகிறது, மூட்டு வலியை குணப்படுத்தும்.
இதிலுள்ள காப்பர் சத்து தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்து தைராய்டு ஹார்மோன் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கிறது.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல் அளவுக்கு அதிகமாக உட்கொண்டு வயிறு மந்தமாகி வயிற்று வலியை உண்டாக்கும்.
இனிப்பு அதிகம் என்பதால் சர்க்கரை நோயாளிகளும், பொட்டாசியம் அதிகம் இருப்பதால் சிறுநீரக நோயாளிகளும் சாப்பிடக்கூடாது.
குடல்வால் அலர்ஜி இருப்பவர்கள் பலாப்பழம் சாப்பிடக்கூடாது.