சிறுநீரக பிரச்சனை உள்ளவரா நீங்கள்? அப்போ இந்த காய்கறிகளை எடுத்துக்காதீங்க
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எந்தெந்த காய்கறிகளை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிறுநீரக பிரச்சனை
இன்றைய காலத்தில் ஒவ்வொரு நபரின், வாழ்க்கைமுறை, உணவு பழக்கவழக்கம் இவை முற்றிலுமாக மாறியுள்ள நிலையில், இதனால் உடலில் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றது.
அதிலும் ஆரோக்கியமற்ற உணவுகள், பானங்களால் சிறுநீரகம் அதிகம் பாதிக்கப்படுகின்றது. சோடா போன்ற பானங்களை தற்போது அதிகமாக பருகி வரும் நிலையில், சிறுநீரக கற்கள் உ்ட்பட பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
பச்சை காய்கறிகள் உடம்பிற்கு ஆரோக்கியம் அளித்தாலும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் சில காய்கறிகளை எடுத்துக் கொள்வது கூடாதாம்.
பச்சை காய்கறிகளில் அதிகமான வைட்டமின் மற்றும் தாதுக்கள் காணப்படுவதுடன், உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது. ஆனால் பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஏனெனில் காய்கறிகளில் பாக்டீரியா, நாடாப்புழுக்கள் மற்றும் அதன் முட்டைகள் காணப்டும். இவை குடலில் இருந்து ரத்தம் மற்றும் மூளை வரை பயணிக்கும். இதனால் உடலில் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றது.
சில பச்சை காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், சிறுநீரகம் முதல் கல்லீரல் வரை பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. தற்போது சிறுநீரக நோயினால் அவதிப்படுபவர்கள் என்னென்ன காய்கறிகளை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சிறுநீரக நோயாளிகள் எந்த காயை தவிர்க்கனும்?
கீரை ஆரோக்கத்திற்கு அதிக நன்மை அளித்தாலும், பச்சையாக சாப்பிடக்கூடாது. கீரையில் உள்ள ஆக்சலேட்டுகள் சிறுநீரக கற்களை உருவாக்கும் தன்னை கொண்டது. ஆகையால் கீரையை சுத்தம் செய்து பின்பு சமைத்து சாப்பிடவும்.

நார்ச்சத்து கொண்ட காய்களில் ஒன்றான முட்டைக்கோஸினை பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் நாடாப்புழு முட்டை மற்றும் லார்வாக்கள் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும். இதனை சாப்பிடும் போது ரத்த ஓட்டத்தில் கலந்து கடுமையான பிரச்சனையை ஏற்படுத்தும்.
மிளகாய் உடம்பிற்கு ஆரோக்கியத்தினை அளித்தாலும், அதன் மேலுள்ள காம்பு மற்றும் விதைகளை அகற்ற வேண்டும். மேலும் வெதுவெதுப்பான நீரில் கழுவுவது அவசியம். ஏனெனில் இதிலும் நாடாப்புழு முட்டைகள் இருக்கக்கூடும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |