சிறுநீரகத்தை பத்திரமா பாத்துகோங்க...இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை
சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப கட்டங்களில், பெரும்பாலும் அறிகுறிகள் எதுவும் இருக்காது. சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்படும்போது உடனடியாக தோன்றும் சில அறிகுறிகள் உள்ளன, ஆனால் நாம் அவற்றைப் பற்றி அலட்சியமாக இருக்கிறோம்.
வானிலையின் தாக்கம் அல்லது அன்றாட வழக்கத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படுவதாக நினைத்து அந்த அறிகுறிகளை பின்தள்ளுகிறோம்.
இப்படி செய்யதாமல் எப்படி அதை உடனடியாக அறிவது என்பதை நிபுணர் கருத்துடன் இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள்
நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு இரத்தத்தை வடிகட்டி சுத்தம் செய்து உடலில் இருந்து கழிவுப்பொருட்களுடன் அதிகப்படியான நீரையும் அகற்றுவதாகும்.
சிறுநீரகத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தால் சிறுநீரகத்தால் அதன் செயல்பாடுகளை சரியாகச் செய்ய முடியாது. அதன் விளைவு முழு உடலிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், உங்கள் சிறுநீர் கழிக்கும் வழக்கம் மாறும் வழக்கத்தை மீறி அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். குறிப்பாக இரவில் இந்தப் பிரச்சனை அதிகமாக இருக்கும்.
கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் வர ஆரம்பிக்கும். சிறுநீரில் நுரை, சோர்வு மற்றும் பலவீனம், இடுப்பு மற்றும் பின்புறத்தில் வலி மற்றும் வாயில் உலோக சுவை ஆகியவை சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப அறிகுறிகளாகும்.
இது தவிர, சிறுநீரில் இரத்தம் இருந்தால் மற்றும் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால். சருமம் வறண்டு, உடலில் எங்கும் அரிப்பு ஏற்பட்டால், இவை சிறுநீரக செயலிழப்பின் கடுமையான அறிகுறிகளாகும்.
இது தவிர, நினைவாற்றல் இழப்பும் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறியாகும். பசியின்மை மற்றும் எடை இழப்பு ஆகியவை சிறுநீரக செயலிழப்பின் கடுமையான அறிகுறிகளில் ஒன்றாகும்.
இதை அலட்சியமாக விடாமல் மருத்துவரை தொடர்பு கொண்டு சிகிச்சை பெறுவது அவசியம்.இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
