ஆர்த்தியுடன் நடிகை குஷ்பு... புகைப்படத்துடன் கூறிய ஒற்றை வார்த்தை
நடிகை குஷ்பு ரவி மோகன் மனைவி மற்றும் மகன்களுடன் எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டுள்ளது வைரலாகி வருகின்றது.
ஆர்த்தி குடும்பத்துடன் குஷ்பு
நடிகர் ரவிமோகன் ஆர்த்தி தம்பதிகள் விவாகரத்து கேட்டு பிரச்சனை மிகவும் தீவிரமாக சென்ற நிலையில், சமீபத்தில் மீண்டும் பூதாகரமாக இந்த பிரச்சனை வெடித்தது.
ரவி மோகனுடன் பாடகி கெனிஷா தோழியாக இருந்துவந்த நிலையில், இவை தவறாக பேசப்பட்டதால் கெனிஷா சென்னையை விட்டே கிளம்புவதாக கூறிச் சென்றுள்ளார்.

இதனால் பொங்கி எழுந்த ரவி மோகன் தனது வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் அனைத்தையும் போட்டு உடைத்தார். அதுமட்டுமின்றி மூன்றெழுத்து இட்லி நடிகை தான் தனது பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று கூறினார்.
ரவிமோகன் குஷ்புவை தான் கூறினார் என்று அனைவருக்கும் தெரிந்த நிலையில், தற்போது குஷ்பு போட்டுள்ள பதிவு அதிகமாக கவனிக்கப்பட்டு வருகின்றது.

ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் குஷ்பு புகைப்படம் எடுத்துள்ள நிலையில், இதனை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு என் குடும்பம் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் ஆர்த்தி மற்றும் மகன்கள், தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் ஆகியோர் இருந்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |