வலியால் துடி துடித்த குஷ்பு... மருத்துவ மனையில் அனுமதி! தற்போதைய நிலை என்ன தெரியுமா?
நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவருக்கு என்னவாயிற்று என்பதையும் அவரே விளக்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
ஆண்களே...இந்த ராசி பெண்கள் மனைவியாக கிடைத்தால் கண்ண மூடிட்டு கல்யாணம் பண்ணுங்க!
On the road to recovery.. ?? pic.twitter.com/wsWDFH7aku
— KhushbuSundar (@khushsundar) April 22, 2022
பின்னர் கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் வழக்கம்போல அரசியல், சீரியல், டைரக்ஷன் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார். மருத்துவமனையில் இருக்கும் குஷ்புவை பார்க்கும் ரசிகர்களும் அவரது ஆதரவாளர்களும் என்னாச்சு என கேட்டுள்ளனர்.
எலும்பு பகுதியில் வலி
குஷ்பு பதிலளிக்கையில் முதுகு தண்டுவடத்தில் கீழ்பகுதியில் உள்ள எலும்பு வலி (tail bone) பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.
தற்போது பரவாயில்லை என கூறியுள்ளார். tail bone என்றால் முதுகு தண்டுவடத்தில் 33 எலும்புகள் இருக்கும்.
அதில் கடைசி 4 எலும்புகளை காக்சியக்ஸ் என்று சொல்வார்கள். இந்த 4 எலும்புகளைத்தான் tail bone என்பார்கள்.
மொறு மொறு கேழ்வரகு பக்கோடா செய்வது எப்படி?

tail bone என்றால் என்ன?
அந்த 4 எலும்புகளும் ஒட்டிக் கொண்டு வளைந்தாற்போல் இருக்கும். இது யாருக்கெல்லாம் வரும் என்றால் மாடியிலிருந்தோ அல்லது உயரமான இடத்திலிருந்தோ கீழே விழும் போது நமது புட்ட பகுதி தரையில் படும்படி விழும்போது ஏற்படும் அதிர்வால் இந்த எலும்புகள் ஒட்டிக் கொள்ளும், யாராவது நீண்ட நேரம் பயணித்துக் கொண்டே இருந்தாலும் அவர்களும் இந்த வலி ஏற்படலாம்.
இந்த வலி பொருத்து கொள்ள முடியாத அளவுக்கு இருக்குமாம்.

உட்கார முடியாத அளவுக்கு வலி உச்சத்தில் இருக்கும். இதற்கு பிசியோதெரபி, அல்ட்ராசவுண்ட் சிகிச்சைகள் அளிக்கப்படும். இந்த வலியால்தான் குஷ்பு அவதிப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.