பேய்களுக்கு நடுவே மரண பயத்தில் நடுநடுங்கும் மைனா நந்தினி! பரிதாபப்பட வைக்கும் காட்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் கில்லாடி ஜோடிஸ் நிகழ்ச்சியில் தற்போது புதிய டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கில்லாடி ஜோடிஸ்
பிரபல ரிவியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடிஸ் என்ற தலைப்பில் ஒளிபரப்பாகியது.
வெறும் இரண்டு சீசன்கள் மட்டுமே ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி பின்பு நடைபெறவில்லை. இந்நிலையில் கில்லாடி ஜோடிஸ் என்ற பெயரில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது ஞாயிறு இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சமூகவலைத்தளங்களைச் சேர்ந்த ரீல் மற்றும் ரியல் ஜோடிகள் கலந்து கொண்டு தங்களது வலிமை, மன உறுதி இவற்றினைக் கொண்டு விளையாடுகின்றனர்.
காடு, நீர், நெருப்பு, மலை என நான்கு கடினமான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சியில், கலந்து கொண்ட போட்டியாளர்களின் அன்பு மற்றும் துணிச்சல் ஒன்றாக வெளிப்படுகின்றது.
இந்நிகழ்ச்சியினை நடிகர் சஞ்சீவ் தொகுத்து வழங்கி வருகின்றார். 8 ஆண்டுக்கு பின்பு இவர் சின்னத்திரைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கை, வியட்நாம், தாய்லாந்து, மாலத்தீவுகள் போன்ற நாடுகளில் நடைபெற்று வருகின்றது.
புதிய டாஸ்க்
சமீபத்தில் நெருப்பு டாஸ்க் முடிந்த நிலையில், தற்போது பல வருடமாக அடைத்து வைக்கப்பட்ட பாழடைந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தனது ஜோடியை தேட வேண்டும்.
அவ்வளவு எளிதாக இந்த டாஸ்க்கை நினைக்க வேண்டாம். கடுமையான இருட்டில், பல பேய்கள் போன்ற செட்டப் செய்யப்பட்டுள்ளது. பெண் போட்டியாளர்கள் கையில் ஒரே ஒரு டார்ச் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் மைனா நந்தினி தனது கணவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பயங்கர திகில் நிறைந்த காணொளியின் சில காட்சிகளை இங்கே காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |