கில்லாடி ஜோடிஸ்: டைட்டிலை தட்டிச் சென்ற ஜோடி யார்? உயிரை பணய வைத்த ஜோடிக்கு கிடைத்த சர்ப்ரைஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் கில்லாடி ஜோடிஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபினாலே நேற்று நடைபெற்ற நிலையில், டைட்டில் வின்னராக தெரிவுசெய்யப்பட்ட ஜோடியை குறித்து தெரிந்து கொள்வோம்.
கில்லாடி ஜோடிஸ்
பிரபல ரிவியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடிஸ் என்ற தலைப்பில் ஒளிபரப்பாகியது.
வெறும் இரண்டு சீசன்கள் மட்டுமே ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி பின்பு நடைபெறவில்லை. இந்நிலையில் கில்லாடி ஜோடிஸ் என்ற பெயரில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது ஞாயிறு இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
கடுமையான போட்டியாக இருந்த இந்நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதில் சஞ்சீவ் தொகுப்பாளர் பணியில் 30 ஆண்டுகளாக இருப்பதால் அவரை மேடையில் வைத்து கௌரவப்படுத்தப்பட்டது. .
இதனால் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சஞ்சீவ் கண்கலங்கி அழுதுள்ளார். ஏனெனில் அவரது அக்கா சிந்து இவரது வெற்றியை பார்க்கவில்லையே என்ற கவலை அவருக்கு இருந்தது.
வெற்றியாளராக ஹேம்நாத், காயத்ரியும், இரண்டாவது இடத்தை நந்தினி மற்றும் யோகேஷ் இவர்கள் பிடித்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |