KGF-ல் ராக்கி பாய் ஆக மிரட்டிய யாஷ்.. சுந்தரபாண்டியன் படத்தில் நடிச்சிருக்காரா? வைராகும் புகைப்படங்கள்
கே.ஜி.எப் படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரவலமானவர் தான் கன்னட நடிகர் யாஷ்.
நடிகர் யாஷ்
ராக்கி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் கால் பதித்தவர் தான் யாஷ். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் நவீன் குமார் கவுடா.
நாடகங்களில் நடிப்பதற்காக பின்னாளில் தன்னுடைய பெயரை யாஷ் என மாற்றிக்கொண்டார். பின்னர் அதுவே அவருக்கு அடையாளமாக மாறியது.
viral video: நட்புக்காக சம்பளமே வாங்காத நயன்தாராவிடம் நட்டஈடு கேட்ட தனுஷ்... கொந்தளிக்கும் ரசிகர்கள்
நாடக கலைஞராக நடித்துவந்த யாஷுக்கு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து கன்னட சீரியல்களில் நடித்து வந்த யாஷ், கடந்த 2008-ம் ஆண்டு சினிமாவுக்குள் நுழைந்தார்.
இவரின் முதல் திரைப்படமான ராக்கி தோல்வி அடைந்ததை அடுத்து பிற மொழி படங்களை ரீமேக் செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டினார் யாஷ்.
அந்த வகையில் தமிழில் விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன களவாணி படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தார்.
தமிழைப்போல் இப்படம் கன்னடத்திலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து சில ஆண்டுகள் வெற்றி, தோல்வி என சென்றுகொண்டிருந்த யாஷின் சினிமா கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது கே.ஜி.எப் தான்.
உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1200 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தின் மூலம் பட்டித்தொட்டியெல்லாம் யாஷ் பிரபல்யம் அடைந்தார்.
சுந்தரபாண்டியன்
சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் லட்சுமி மேனன் நாயகியாக நடித்திருப்பார். மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் பெரியளவு வரவேற்ழப பெற்றது.
ஆனால், KGF யாஷ் இப்படத்தில் நடித்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் தமிழில் வெளிவந்த சுந்தரபாண்டியன் படத்தில் இல்லை.
கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்ட சுந்தரபாண்டியன் படத்தில் KGF யாஷ் தான் ஹீரோவாக நடித்த்திருக்கின்றார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |