திடீர் மூச்சு திணறல்... KGF பட நடிகர் மரணம்
நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த கே.ஜி.எஃப் படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணா ஜி ராவ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கே.ஜி.எஃப் திரைப்படத்தில்கிருஷ்ணா ஜி ராவ் கண் தெரியாத வயதானவர் தோற்றத்தில் நடித்திருப்பார்.
இவர் பல கன்னட திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
எனினும், இவரை மிகவும் பிரபலமடைய செய்தத படம் என்றால் அது கே.ஜி.எஃப் திரைப்படம் தான்.
கே.ஜி.எஃப் பட நடிகர் மரணம்
கடந்த சில மாதங்களாக திடீர் என மூச்சு திணறல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இவரது குடும்பத்தினர் இவரை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரின் மரணம் திரையுலகை சேர்ந்த பலரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.