KGF நாயகன் யாஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்துப் போன ரசிகர்கள்
கே.ஜி.எப் படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரவலமான கன்னட நடிகர் யாஷின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் யாஷ்
ராக்கி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் கால் பதித்தவர் தான் யாஷ். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் நவீன் குமார் கவுடா. பின்னர் நாடகங்களில் நடிப்பதற்காக தன்னுடைய பெயரை யாஷ் என மாற்றிக்கொண்டார். பின்னர் அதுவே அவருக்கு அடையாளமாக மாறியது.
நாடக கலைஞராக நடித்துவந்த யாஷுக்கு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து கன்னட சீரியல்களில் நடித்து வந்த யாஷ், கடந்த 2008-ம் ஆண்டு சினிமாவுக்குள் நுழைந்தார்.
இவரின் முதல் திரைப்படமான ராக்கி தோல்வி அடைந்ததை அடுத்து பிற மொழி படங்களை ரீமேக் செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டினார் யாஷ். அந்த வகையில் தமிழில் விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன களவாணி படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தார்.
தமிழைப்போல் இப்படம் கன்னடத்திலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து சில ஆண்டுகள் வெற்றி, தோல்வி என சென்றுகொண்டிருந்த யாஷின் சினிமா கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது கே.ஜி.எப் தான்.
கடந்த 2018-ம் ஆண்டு கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் வெளிவந்தது. கன்னட படம் என்பதால் ஆரம்பத்தில் புறக்கணித்த சினிமா ரசிகர்கள், பின்னர் அதற்கு பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்ததை பார்த்து அப்படத்தை கொண்டாடினர். இப்படம் பான் இந்தியா அளவில் மாஸ் ஹிட் கொடுத்தது.
இதையடுத்து கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்த படக்குழு, முதல் பாகத்தைவிட பிரம்மாண்டமாக இரண்டாம் பாகத்தை வெளியிட்டது. இந்த படம் யாஷின் சினிமா வரலாற்றில் பாரிய வெற்றியை பரிசளித்தது.
சொத்து மதிப்பு
தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்துடன் ஒன்றாக வெளியிடப்பட்ட போதும் தளபதியின் படத்தையே கே.ஜி.எஃப் 2 ஓரங்கட்டியது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்து வெற்றிவாகை சூடியது.
இப்படத்தின் முதல் பாகத்திற்காக அவருக்கு வெறும் ரூ.4 கோடி சம்பளம் பேசப்பட்டு இருந்தாலும், ரிலீசுக்கு பின்னர் அவருக்கு ரூ.15 கோடி வழங்கப்பட்டது. அதேபோல் இரண்டாம் பாகத்துக்கு சம்பளத்தை டபுள் மடங்கு கூட்டிய யாஷ் ரூ.30 கோடி சம்பளம் வாங்கி இருந்தார்.
அடுத்த படங்களுக்கு அவர் ரூ.50 கோடி வரை சம்பளம் வாங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி கே.ஜி.எப் எனும் ஒற்றை படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகர் யாஷின் சொத்து மதிப்பு ரூ.53 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இவர் கே.ஜி.எப் படம் வெற்றியடைந்ததும் பெங்களூருவில் ரூ.4 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றையும் சொந்தமாக வாங்கி இருந்தார். அதுமட்டுமின்றி இவரிடம் ஆடி, ரேஞ்ச் ரோவர், பென்ஸ் என ஏராளமான சொகுசு கார்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |