சூரியன் - கேது சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: சவால்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள்!
Ketu-Sun Conjunction In Leo : வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் நுழைந்தார்.
ஏற்கனவே சிம்மத்தில் கேது பயணித்து வருவதால், சூரியன்–கேது சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இந்த சேர்க்கை செப்டம்பர் 18ஆம் தேதி வரை நீடிக்கும். சூரியன் மற்றும் கேது ஒரே ராசியில் இணைவதால், ஜோதிடத்தின் படி கிரகண யோகம் உருவாகியுள்ளது.

இதனால் சிலருக்கு தன்னம்பிக்கை குறைவு, பணியிடத்தில் பிரச்சனைகள், இலக்குகளை அடைவதில் தடைகள் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படலாம்.
எனவே, இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அப்படியானால், கேது -சூரிய சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 10-ஆம் வீட்டில் கேது-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் பணியிடத்தில் உயர் அதிகாரிகள் அல்லது சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும்.
இல்லையெனில் வேலையில் பிரச்சனைகள் ஏற்பட்டு, வேலை இழக்கும் சூழலும் உருவாகலாம். அவசரம் அல்லது கோபத்தில் பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
பெரிய முதலீடுகளை நன்கு ஆராய்ந்து செய்வதுடன், பண விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் எதிர்ப்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும்.
கும்பம்

கும்ப ராசியின் 7-ஆம் வீட்டில் கேது-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
ஈகோ பிரச்சனைகளால் வணிக கூட்டாளியுடன் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்.
வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், செலவுகளைக் கட்டுப்படுத்துவதும் அவசியம்.நிதி விடயங்களில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மகரம்

மகர ராசியின் 8-ஆம் வீட்டில் கேது-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.
நீதிமன்ற வழக்குகள் தாமதமாகலாம். எதிர்பாராத செலவுகள் அதிகரித்து, பட்ஜெட் சீர்குலைய வாய்ப்புள்ளது. சில சமயங்களில் கடன் வாங்கும் சூழலும் ஏற்படலாம். எனவே பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாக வாய்புள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |