கேது பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை சந்திக்கும் ராசிகள்... யார் யார்னு தெரியுமா?
கேது பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கேது நட்சத்திர பெயர்ச்சி
ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. இவை 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
9 கிரகங்களின் மிகவும் அசுப கிரகமாக ராகு, கேது பார்க்கப்படுகின்றது. பெயர்ச்சியின் போது இவை சில ராசியினருக்கு எதிர்மறையான தாக்கத்தையும், சில ராசியினருக்கு நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது.
ராகு, கேது பெயர்ச்சி ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது. அவ்வப்போது நட்சத்திரத்தினை மாற்றும் நிலையில், ஆகஸ்ட் 2ம் தேதி கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி நடைபெறுகின்றது.
இதில் அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் ராசியினரை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
ரிஷப ராசியினர் இந்த கேது நட்சத்திர பெயர்ச்சியினால் அதிர்ஷ்டம், செல்வத்தை பெறுவதுடன், தொழில் ரீதியாக இருந்த பிரச்சனைகளும் தீருமாம். உடன்பிறந்தவர்களின் உதவி, நிதி ரீதியாக இருக்கும் பிரச்சனைகள் தீர்கின்றது.
புதிய வேலை கிடைப்பதற்கு அதிக வாய்ப்புள்ள நிலையில், சாதகமான முடிவையும் எடுப்பீர்கள். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிப்பதுடன், ஒவ்வொரு சூழலும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வெளிநாடு செல்லவும் வாய்ப்பு கிடைக்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு கேது நட்சத்திர பெயர்ச்சியினால் நிதி நிலை மேம்படுவதுடன், கஷ்டங்கள் அனைத்தும் நீங்குமாம். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடைபெறும்.
நீண்ட காலமாக முடியாமல் இருந்த பணிகள் அனைத்தும் முடிவிற்கு வரும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைப்பதுடன், வருமானமும் அதிகரிக்கும். ஆகஸ்ட் மாதத்தில் நீங்கள் நினைத்த காரியம் நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும்.
[O883J[
தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சியினால் நேர்மறைமறையான ஆற்றல் பெறுவதுடன், புதிய தொழில் தொடங்க வாய்ப்பும் உள்ளது.
பழைய கடன்கள் அடைவதற்கு வாய்ப்புள்ளது. சக ஊழியர்களின் ஆதரவும் உங்களுக்கு இருப்பதுடன், உடன் பிறந்தவர்கள் நிதி உதவி செய்வார்கள். சொத்து, வாகனம், வீடு இவைகளை வாங்கும் யோகம் இருக்கும். பணியில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், நீண்ட கால கடன் பிரச்சனை முடிவிற்கு வரும். மன அழுத்தம் குறையவும் செய்யும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |