கூலி தொழிலாளிக்கு ஒரே நாளில் லாட்டரியில் அடித்த ஜாக்பாட் - போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய சுவாரஸ்யம்
கூலி தொழிலாளி ஒருவருக்கு லாட்டரியில் 80 லட்சம் ரூபாய் பரிசு விழுந்து காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தை சேர்ந்தவர் அலாவுதீன்(40). இவர் 15 ஆண்டுக்கு முன்பே குடும்ப வறுமை காரணமாக கேரளாவிற்கு வந்து வசித்து வருகிறார்.
இவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் அசாமிலேயே உள்ளனர். அலாவுதீனுக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்துள்ளது.
80 லட்சம் பரிசு
அதன்படி வழக்கம்போல ஒரு லாட்டரியை வாங்கியுள்ளார். இதனிடையே லாட்டரியின் முடிவுகளை பார்த்தப்போது அவருக்கு இன்ப அதிர்ச்சியே ஏற்பட்டுள்ளது.
அவர் வாங்கி லாட்டரியில் அவருக்கு 80 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் அலாவுதீன் மூவாட்டுப்புழா காவல்நிலையத்திற்கு சென்று தனக்கு பாதுகாப்பு வழங்கும்படி கேட்டிருக்கிறார்.

உதவிய காவல்துறை
பின்னர் விஷயத்தை அறிந்த காவல்துறை அதிகாரிகள் லாட்டரி நிறுவன அதிகாரிகளிடம் இருந்து ரசீதை பெற்று அலாவுதீனிடம் வழங்கியிருக்கிறார்கள்.
அதன் பிறகு, அதே பகுதியில் அமைந்துள்ள வங்கி ஒன்றிற்கு அலாவுதீனை அழைத்துச் சென்று அவருக்குரிய பணத்தையும் வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.
எனவே வறுமை காரணமாக 15 ஆண்டுகளாக கேரளாவில் கூலி வேலை செய்தவருக்கு 80 லட்சம் ரூபாய் கிடைத்த சம்பவம் அனைவருக்கும் வியப்பையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.