16 வயது மாணவியின் உயிரைப் பறித்த பரோட்டா! காரணம் என்ன?
பரோட்டா சாப்பிட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் தனக்கு மைதா மற்றும் கோதுமையினால் செய்யப்பட்ட உணவுகள் ஒவ்வாமையாக இருந்த நிலையில் இதற்கான சிகிச்சையும் பெற்றுள்ளார்.
நாளடைவில் தனக்கு சற்று பிரச்சினை சரியாகிவிட்டதாக எண்ணிய இவர் புரோட்டா சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் திடீரென உடல்நலக் கோளாறு ஏற்படவே உறவினர்கள் வெண்டிலேட்டர் சிகிச்சையில் வைத்து அவரை பார்த்து வந்துள்ளனர்.
ஆனால் குறித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோதுமை ஒவ்வாமை என்றால் என்ன?
கோதுமை சேர்த்த உணவை உண்பதாலோ அல்லது கோதுமை மாவை நுகர்வதாலோ ஒருவருக்கு தீவிர ஒவ்வாமை பிரச்னைகள் ஏற்படும்.
இதனை தவிர்க்க, கோதுமையை தவிர்ப்பதே ஒரே வழி. கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும், இதனை பின்பற்றுவது சற்று கடினம்தான்.
ஏனென்றால், சில பொருள்களில் மறைமுகமாக கோதுமை சேர்க்கப்பட்டிருக்கும் என்பதால் அறியாமையில் அதனை உட்கொள்ளவும் அதிக வாய்ப்புள்ளது.
உங்கள் உடல் கோதுமையில் உள்ள புரதங்களுக்கு ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் போது கோதுமை ஒவ்வாமை ஏற்படுகிறது. செலியாக் நோயில், கோதுமையில் உள்ள ஒரு குறிப்பிட்ட புரதம் - குளூட்டன் - இருப்பதால் ஒவ்வாமை ஏற்படுகிறது.