பரோட்டா சாப்பிட்டு தூங்கிய இளைஞர்! பரிதாபமாக உயிரிழந்த சோகம்
ஹொட்டலில் பரோட்டா சாப்பிட்ட 27 வயது வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரோட்டா சாப்பிட்ட இளைஞர்
சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(27). வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கராக பணியாற்றிவரும் இவர், நேற்று இரவு கடையில் பரோட்டா வாங்கி குடும்பத்தினருடன் சாப்பிட்டுள்ளார்.
பின்பு அனைவரும் தூங்க சென்ற நிலையில் நள்ளிரவில் திடீரென கார்த்திக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே உறவினர்கள் கார்த்திக்கை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் அவரது உடல்நிலை மோசமானதால், மேல் சிகிச்சைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னரே காரணம் என்ன என்பது தெரியவரும் என்று கூறப்படுகின்றது.
பரோட்டா வாங்கி சாப்பிட்டட வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெற்றோர், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இதேபோல் சென்னையில் பரோட்டா, பீசா, சிக்கன் வாங்கி சாப்பிட்ட வாலிபர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.