கேரளா ஸ்டைல் இறால் மொய்லி ரெசிபி.... வெறும் 10 நிமிடத்தில் செய்வது எப்படி?
அசைவ பிரியர்களுக்கு பிடித்த இறாலை வைத்து கேரளா ஸ்டைல் இறால் மொய்லி எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக அசைவ பிரியர்களுக்கு கடல்வகை உணவுகள் என்றால் அம்புட்டு பிரியம். கடலில் கிடைக்கும் அதிகமான மீன் வகைகள், இறால், நண்டு என அனைத்தும் பயங்கர ருசியாகவே இருக்கும்.
மீன் சுவைக்கு நிகராக இருக்கும் இறாலில் கிரேவி, வறுவல், பொரியல் என வைத்து சாப்பிட்டிருப்போம். தேங்காய் பால், எலுமிச்சை சாறு, இஞ்சி, பச்சை மிளகாய் வைத்து சமைக்கப்படும் கேரளா ஸ்டைல் இறால் மொய்லி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
இறால் - அரை கிலோ
தேங்காய் - அரை மூடி
எலுமிச்சை - அரை பழம்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - சிறிதளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
கருவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
கரம் மசாலா - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
இறாலை தோல் மற்றும் குடல் இவற்றினை எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். இதில் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளி இவற்றினை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்கவும். பின்பு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கி, பின்பு மஞ்சள் மற்றும் மிளகாய் தூள்கள், கரம் மசாலா சேர்த்து கிளறவும்
இதனுடன் ஊற வைத்துள்ள இறால், தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தக்காளியை சேர்த்து வதக்கவும். கடைசியாக தேங்காய் பால் ஊற்றி கொதித்து வந்ததும், எலுமிச்சை சாறு சேர்த்து சற்று கொதிக்க விடவும்.
தற்போது சுவையான கேரளா ஸ்டைல் இறால் மொய்லி தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |