மட்டன் பிடிக்கும்னா இப்படி கிரேவி வச்சு சாப்பிடுங்க! இனி அடிக்கடி செய்வீங்க
மட்டனினால் செய்யப்படும் எந்தவொரு உணவுக்கும் அதிக ரசிகர்கள் உண்டு. அதன்படி மட்டன் கிரேவி செய்வது மிகவும் சுலபமானது.
இதை சப்பாத்தி, பூரி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
சரி இனி கேரளா ஸ்டைல் மட்டன் கிரேவி எவ்வாறு செய்வதென பார்ப்போம்.
image - spicy kitchen
தேவையான பொருட்கள்
மட்டன் - 1/2 கிலோ
நறுக்கிய தேங்காய் - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 3/4 மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - 2 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச்
வெள்ளைப் பூண்டு - 12 பல் (பொடியாக நறுக்கியது)
மசாலாத் தூள் - 1/2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தல்லி - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
தண்ணீர் - 1 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
image - kerala tourism
செய்முறை
முதலாவதாக மட்டனை நன்றாகக் கழுவி, நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பின்பு ஒரு குக்கரில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் தேங்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன்பின்னர் இஞ்சி, வெள்ளைப் பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கவேண்டும்.
பின்னர் அதில் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். அதன்பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கவும்.
அதற்கடுத்ததாக அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு நீர் சேர்த்து கிளற வேண்டும்.
பின்பு குக்கரை மூடி குறைவான தீயில் வைத்து 3 விசில் விட்டு இறக்கிக்கொள்ள வேண்டும். விசில் வந்ததும் மேலே கொத்தமல்லியைத் தூவ வேண்டும்.
இப்போது அருமையான கேரளா ஸ்டைல் மட்டன் கிரேவி ரெடி.
image - amma secret recepie