Mango Pickle: கேரளா பாணியில் மங்கா ஊறுகாய்: வெறும் பத்தே நிமிடத்தில் செய்யலாம்
பொதுவாகவே கோடைக்காலம் வந்துவிட்டால், வாயில் நீர் ஊறும் மாங்காயின் சீசனும் ஆரம்பித்துவிடும்.
ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது மாங்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
இந்த மாங்காயை வைத்து சிலர் பச்சடி செய்து சாப்பிடுவார்கள். மேலும் சிலர் இதில் உப்பு மற்றும் மிளகாய் தூள் போட்டு சாப்பிடுவார்கள்.
நாவூரும் சுவையில் கேரளா பாணியில் மங்கா ஊறுகாய் எவ்வாறு எளிமையான முறையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மாங்காய்- 1
தனி மிளகாய் தூள்- 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்-1/4 தே.கரண்டி
வெந்தயத்தூள் -1/4 தே.கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு -தேவையான அளவு
தாளிக்க தேவையானவை
எண்ணெய் -2 மேசைக்கரண்டி
கடுகு - 1/4 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் வற்றல் -1
செய்முறை
முதலில் மாங்காய் நல்ல பச்சையான மாங்காயை தெரிவு செய்து நன்றாக கழுவி, ஈரம் இல்லாமல் துடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மாங்காயை சிறிய துண்டுகளாக பொடியாக நறுக்கி உப்பு கலந்து தனியான வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், வறுத்து பொடித்த வெந்தய பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், வற்றல் மிளகாய் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
கலந்து உடனே உப்பு சேர்த்து வைத்துள்ள மாங்காய் துண்டுகளையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் கேரளா பாணியில் மங்கா ஊறுகாய் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |