திடீரென பரவும் புதிய வகை NORO வைரஸ்! கேரளாவில் 13 பேர் பாதிப்பு;
கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் ஒரு பக்கம் மழைவெள்ளத்தினால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். ஆனால் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையவில்லை என்பதும் தினமும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே,கேரளாவில் என்ற புதிய வகை நோரோ வைரஸ் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், இந்த வைரஸ் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வலிமையானது என்றும் இந்த வைரஸ் தாக்கப்பட்டவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் இதுவரை 13 பேர் நோரோ (NORO) வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நோரோ வைரசால் பாதிக்கப்பட்ட அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோரோ வைரஸ் தொற்று பாதிப்பவர்களுக்கு வயிறு மற்றும் குடல் பகுதிகளில் கடுமையான எரிச்சல் ஏற்படுவதோடு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கும் ஏற்படும்.
விலங்குகளால் பரவும் இந்த நோரோ வைரஸ் அசுத்த நீர் மற்றும் உணவு மூலம் மனிதர்களுக்கு பரவுவதாக கூறப்படுகிறது.