தேங்காய் எண்ணெய் கற்பூரம்: கேரளா பெண்களின் தலைமுடி பராமரிப்பு தீர்வு என்ன?
இந்த கால கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி தலைமுடிப்பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகின்றது. இந்த பிரச்சனையை போக்குவதற்கு பலரும் பலமுறையில் முயற்ச்சி செய்கின்றனர்.
இந்த பிரச்சனையை நாம் வீட்டில் உள்ள பொருட்களை வதை்தே இல்லாமல் செய்ய முடியும். ஆனால் எல்லா பொருட்களும் நல்ல பலனை தரும் என சொல்ல முடியாது. கேரளா பெண்கள் இயற்கையில் மிகவும் அழகாக இருப்பார்கள்.
இவர்களின் அழகிற்கு இவர்கள் பெரும்பாலும் வீட்டில் உள்ள பொருட்களையே பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் தலைமுடிப்பரமரிப்பில் இவர்கள் தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
தலைமுடி பராமரிப்பு
தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாவும் சிலருக்கு இருக்கும் ஆனால் பளப்பாக இல்லாமல் வறட்ச்சியாக இருக்கும். நமது உடல் மட்டுமல்ல, தலைமுடியும் ஹைட்ரேட்டிங்காக இருக்க வேண்டியது அவசியம்.
அதற்கு கற்பூர எண்ணெய் உதவி செய்யும். இது தலைமுடியின் வறட்சியை நீக்கி, முடியைப் பளபளப்பாக மாற்றும். தலைமுடி உதிர்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு பொடுகுத்தொல்லை முக்கிய காரணமாகும்.
இதற்காக நிறைய ஷாம்பூக்களை பயன்படுத்தி இருப்பீர்கள் ஆனால் இந்த கற்பூரம் சேர்த்த தேங்காய் எண்ணையை முடியின் வேர்க்கால்களில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்தால் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கும்.
குறைந்தது 1 மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு தலைமுடியை அலசிக் கொள்ள வேண்டும். இதை ஓரிரு முறை பயன்படுத்தியதுமே பொடுகு முழுமையாக குறையும். தலைமுடி உதிர்தல் பிரச்சினை இருக்காது.
இந்த முடி உதிர்தல் பிரச்சனைக்கு ஊட்டச்சத்து குறைபாடு, முடி வறட்சி, ஆகியவற்றுடன் உசசந்தலையில் ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதும் முடி உதிர்தலை அதிகரிக்கும்.
இதை தடுத்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதற்கு தேங்காய் எண்ணெயுடன் கற்பூரம் சேர்த்து கலந்து அந்த எண்ணையை உச்சந்தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து வர, உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
இது முடி உதிர்தலை தடுதது முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். இந்த எண்ணெய்யை பாடசாலை செய்யும் மாணவர்கள் உச்சந்தலையில் தேய்த்து வந்தால் பேன்தொல்லை இருக்காது.
கற்பூரம் சேர்த்த தேங்காய் எண்ணையை தலைக்கு அப்ளை செய்து ஊறவைத்து குளித்து வர, பேன் தொல்லை முழுமையாக குறைந்து விடும். தலைமுடி வளர்ச்சி மிகவும் கன்றி அது ஒர கட்டத்திற்கு மேல் வளராது என்பவர்களுக்கு இது ஒர சிறந்த தீர்வாகும்.
தேங்காய எண்ணையோடு சிறிது கற்பூரத்தைச் சேர்த்து லேசாக சூடுசெய்து வெதுவெதுப்பான நிலையில் முடியின் வேர்க்கால்களில் அப்ளை செய்து மசாஜ் செய்து வாருங்கள். இப்படி தொடர்ந்து வாரத்துக்கு 2-3 முறை செய்து வருவதன் மூலம் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும். அடர்த்தியும் அதிகமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |