செயின் திருடனை தைரியத்தோடு மடக்கிப் பிடித்த வீரப்பெண் - வைரலாகும் வீடியோ
கேரளாவில் செயின் பறித்த திருடனை மடக்கிப் பிடித்த வீரப்பெண்ணி வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருடனை தைரியத்தோடு மடக்கிப் பிடித்த வீரப்பெண்
தினமும் ஏதாவது ஒரு நிகழ்வு சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடும். சில நிகழ்வுகள் நம்மை அதிர்ச்சியாக்கும். சில நிகழ்வுகள் நம்மை சிந்திக்க வைக்கும். ஆனால், தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கேரளாவில் ஒரு தாய், தன் மகளுடன் சாலையில் சென்றுக் கொண்டிருந்தாள். அப்போது, இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் ஹெல்மெட் அணிந்துக் கொண்டு வந்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென்று பைக்கில் வந்த ஒருவர் திடீரென சாலையில் நடந்து வந்துக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்தார்.
இதில், உடனே சுதாரித்துக் கொண்ட அப்பெண் அந்தத் திருடனை தன் கையால் மடக்கிப் பிடித்தார். அப்போது, பைக் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததும், செயினை பறித்த அந்த நபரை அப்பெண் தைரியத்தோடு எதிர்கொண்டார். இதைப் பார்த்த பொதுமக்கள் ஓடி வந்து அந்த செயின் திருடனை வெளுத்து வாங்கினர்.
தற்போது, இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அப்பெண்ணின் தைரியத்தை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
This is called the real power of women.#JusticeForShaliniYadav #EktaKapoor #KritiSanon The Family Man Marriage In 17 Minutes #NagaChaitanya #AirIndia #Aurangzeb #Kolhapur Scam 1992 Umesh Yadav #Kerala #TejRan pic.twitter.com/76S5GB7C1C
— जय जवान जय किसान ?? (@FalanaDikhana) June 7, 2023