நாற்காலியில் அமர்ந்திருந்த முதியவர் - சட்டைப் பையில் திடீரென வெடித்து சிதறிய செல்போன் - அதிர்ச்சி வீடியோ!
கேரளாவில், சட்டைப் பையில் இருந்த மொபைல் போன் வெடித்து தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென செல்போன் வெடித்து சிதறி விபத்து
கேரளாவைச் சேர்ந்தவர் எலியாஸ் (70) என்ற முதியவர் ஒரு உணவகத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது, அவர் சட்டைப் பையில் இருந்த செல்போன் திடீரென்று வெடித்து சிதறி சட்டையில் தீப்பிடித்து. உடனே சுதாரித்துக் கொண்ட முதியவர், தன்னுடைய வேஷ்டியால் அந்த தீயை உடனடியாக அணைத்தார்.
தற்போது இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முதியவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், போனின் பேட்டரி சூடாகி வெடித்ததாகவும், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தெரிவித்தார்.
தற்போது இது தொடர்பான சிசிடிவி வீடியா காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
@yabhishekhd today happened in Kerala. Don't know which phone pic.twitter.com/CkAdoXfsyp
— THEJAS E R (@thejas_er) May 18, 2023