கடவுளை காண இப்படியொரு விபரீத செயலா? ஒரு நபரால் பலியான 400 உயிர்கள்
கென்யாவில் போதகர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தால் கடவுளை காணலாம் என்று கூறியதால், உண்ணாவிரதம் இருந்தவர்களின் 400 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டினி கிடந்தால் கடவுளை காணலாம்
கென்யா நாட்டைச் சேர்ந்த பாதிரியாரான பால் மெக்கன்ஷி என்பவர் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தால் கடவுளைக் காணலாம் என்று மக்களிடம் பிரச்சாரம் பண்ணியநிலையில், இதனை நம்பி ஏராளமான மக்கள் பட்டினி கிடந்து இறுதியில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலத்தை ஷகாஹோலா வனப்பகுதியில் அடக்கம் செய்துள்ளதும், கடந்த ஏப்ரல் மாதமே இந்த விவகாரம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.
தற்போது குறித்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை வனப்பகுதியில் 403 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி சமீபத்திலும் 12 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களை பிரேத பரிசோதனை செய்ததில் பெரும்பாலானோர், பட்டினியால் உயிரிழந்துள்ளதும், சில குழந்தைகள் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது.
பாதிரியார் மீது இன அழிப்பு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண டிரைவர் ஆக இருந்த மெக்கன்ஸி மத போதகராக மாறி 400க்கும் மேற்பட்டவர்கள் மரணத்திற்கு காரணமாக இருப்பது கென்யாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |