பாடகி கெனிஷாவுக்கு வந்த சோதனை... இணையத்தை ஆக்கிரமிக்கும் வைரல் காணொளி
பாடகி கெனிஷா பிரான்சிஸின் "அன்றும் இன்றும்" என தலைப்பிடப்பட்ட ஆல்பம் பாடலுக்கு அவரை போன்றே நடனமாடிய ஆண்களின் காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
கெனிஷா ஃபிரான்சிஸ்
தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவில் அதிகளவில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருப்பது தான் நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம்.
இவர்களின் விவாகரத்து பிரச்சனையில் முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் என்று கூறப்பட்ட நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில், ரவி மோகன், கெனிஷாவுடன் கைக்கோர்த்தபடி ஜோடியாக வந்தமையால் மீண்டும் சர்ச்சை கிளம்பியது.
இந்த சர்சை இன்னும் முடிவடையாத நிலையில், பாடகி கெனிஷா பிரான்சிஸ் அண்மையில் "அன்றும் இன்றும்" என தலைப்பிடப்பட்ட ஆல்பம் பாடலை வெளியிட்டிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில்,"அன்றும் இன்றும்" ஆல்பம் பாடலுக்கு கெனிஷாவை போன்றே நடனமாடிய ஆண்களின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |