ரவி மோகனின் இயக்கத்தில் உருவாகும் ‘An Ordinary Man’ - இசையமைப்பாளர் இவரா?
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவரது திரைப்படங்கள் மட்டுமின்றி, இவர் தேர்வு செய்து நடிக்கும் கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன.
கடைசியாக இவரது நடிப்பில் ‘பராசக்தி’ திரைப்படம் வெளியானது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ரவி மோகன், தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தற்போது ரவி மோகன் ‘கராத்தே பாபு’, ‘பென்ஸ்’, ‘ப்ரோ கோட்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஒருபுறம் நடிகராக தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில், மறுபுறம் திரைப்படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையையும் நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இயக்குநராக ரவி மோகன்
சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரில் தனது சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ரவி மோகன் தொடங்கினார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதல் திரைப்படத்தை உருவாக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

அதன்படி, ‘An Ordinary Man’ என்ற திரைப்படத்தை ரவி மோகன் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இப்படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வருகிறார்.
படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு யார் இசையமைக்கிறார் என்பது குறித்தும் கடந்த சில நாட்களாக பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு
இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ரவி மோகன் இயக்கி வரும் ‘An Ordinary Man’ திரைப்படத்திற்கு கெனிஷா இசையமைக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகராக பல்வேறு வெற்றிப் படங்களை வழங்கி வரும் ரவி மோகன், தற்போது இயக்குநராகவும் புதிய பயணத்தை தொடங்கியுள்ளதால், ‘An Ordinary Man’ திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வலுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |