அந்த நடிகருடன் நெருக்கம் காட்டும் கீர்த்தி சுரேஷ் - வெளியான புகைப்படம்
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013ம் ஆண்டு ‘கீதாஞ்சலி’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனையடுத்து, தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் நடித்தார். இதனையடுத்து, தமிழில், விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
நடிகருடன் நெருக்கம் காட்டும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தற்போது நடிகர் நானியுடன் ‘தசரா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் கீர்த்தி சுரேஷ் , நானி இருவரும் பல புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஒரு பக்கம் நானி கீர்த்தி சுரேஷ் மீது காதலில் விழுந்துள்ளார் என்று தகவல் பரவி வருகிறது. ஆனால், இதையெல்லாம் கீர்த்தி சுரேஷுக்கு தெரிந்திருந்தும் மவுனமாக இருந்து வருகிறார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் வழக்கம்போல் தங்களுடைய கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.